காதலித்துப்பார்
(இக்கவிதை ஒரு மாற்று சிந்தனைக்காக மட்டுமே, நான் காதலுக்கு எதிரி இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்).
பாழுங்கிணரும் பஞ்சு மெத்தையாகும்
பாஷாணமும் பாயாசமாகும் - காதலித்துப்பார்
எமனைத் தவிர
எவனையும்
நண்பனாக்க மாட்டாய் - காதலித்துப்பார்
உன் சவப்பெட்டியை நீயே செதுக்க வேண்டுமா
உன் மரண தேதியை நீயே குறிக்க வேண்டுமா
முள் படுக்கையில் பாய் விரிக்க வேண்டுமா
நூல் அறுந்த பட்டம் போல்
வானில் பறக்க வேண்டுமா - காதலித்துப்பார்
முகத்தில் முள்வேலி அமைக்கலாம்
உன்னை நீயே
நரபலியும் கொடுக்கலாம் - காதலித்துப்பார்
சுடுகாட்டில் வசிக்கலாம்
பிணமெரிவதை ரசிக்கலாம்
பிணவாடையை ருசிக்கலாம்
பிணங்களை கூட புசிக்கலாம் - காதலித்துப்பார்
இறந்த பின்பு
சொர்க்கம் பார்க்கலாம்
இருக்கும் போதே
நரகம் பார்க்க வேண்டுமா
- காதலித்துப்பார்
- காதலித்துப்பார்
- காதலித்துப்பார்