நண்பனின் ஏக்கம்

உயிர் நண்பன் என்றாய்
உனக்காகவே உயிர் வாழ்ந்தேன்
பிறர் உன்னை குறை
கூற என்னால்
கேட்க முடியவில்லை
என்று
உன்னை மாற
சொன்னேன்
மாறினாய்
அடுத்த கணமே
இது வரை
என்னிடம் உனக்கு
பிடித்த ஒன்றை
செய்யாதே
என்றாய்
எனக்காக மாறிய
உனக்காக இதை
கூட செய்யவில்லை
என்றால்
நான் உன்
நண்பன் இல்லை
ஆனால்,
நீ எக்காரனதுக்காக
இப்படி சொன்னாய்
என்று தெரியவில்லை
இருந்தாலும்
உனக்கு சந்தோஷம்
என்றால் உன்
விருப்ப படியே நடக்கிறேன்