க்ளிக்

உன்
பாதி
முகத்துடன்
எனை
திரும்பி
பார்க்கும்
பொழுதுகளில்;
இன்னும்
ஒருமுறைகூட
தவறியதில்லை
நான்;
உன்
ஒருபாதி
புன்னகைகளை
சேகரிப்பதை...

தவறான
கோணங்களில்
எடுக்கப்பட்ட
புகைப்படங்களின்
ஒளிச்சிதறல்
யாவும்
உன்
விழி
உமிழ்ந்த
காதலின்
மிச்சம்...

நீ
பேசாத
மௌனங்களை
என்னவாயிருக்குமென
எண்ணுகிறேன்;
ஏதோ
ஒரு
பக்கமாக
நீ
திரும்பி
அமர்ந்திருக்கும்
ஒரு
ஒளிப்படத்தில்...

எவ்வித
பாவனைகளும்
இல்லாத
உன்னுடைய
இயல்பான
புகைப்படம்தான்
எடுத்ததிலேயே
எனக்கு
பிடித்தது..

ஒளியாகி
ஒவ்வொருமுறையும்
உனை பார்த்து
காதல் படமெடுக்க
கண் சிமிட்டும்
போதெல்லாம்
பதில்
புன்னகை
தர
தவறியதில்லை
நீ;
எனக்கு
மட்டும்...

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (14-May-14, 1:10 pm)
Tanglish : klik
பார்வை : 74

மேலே