பொழிவின்றி கழிக்கின்றனரோ

பொன்மாலை நேரத்தில்
பொன்னிற தேகமுடன்
பொலிவான தோற்றமுடன்
​பொங்கிடும் இன்பமுடன்
பொறித்திடும் கதிரொளியை
பொறுமையுடன் தாங்கிடும்
பொன்னான ஆற்றுநீரில்
பொறுக்கி எடுத்திடவே
பொழுதை கழித்திடவே
பொல்லாத சிறுவர்கள்
பொன்போன்ற பொழுதை
பொழிவின்றி கழிக்கின்றனரோ !

( பொறித்திடும் = தெறித்திடும் )
( பொறுக்கி = சிதறியதை எடுத்தல் )
( பொழிவின்றி = ஆதாயமின்றி )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-May-14, 8:06 am)
பார்வை : 92

மேலே