தார் பழுத்த வாழை - நரியனுர் ரங்கு
நேருக்கு நேர் இனி
நேர் படுவேனோ - வெறும்
நினைவிலே கரைந்து
உயிர் விடுவேனோ
யாருக்கு யார் எனும்
விதி மறந்தோம்
அடியற்றக் கடல்மேலே
வழி நடந்தோம்
விதி விரித்த வலையோ
பழகி களித்த மனம்
பதறித் துடி துடிக்க
பிடிபட்டுப் போனோம்
தனித்தனி சிறையிலே
அடைபட்டுப் போனோம்
யார் விதைத்த வினையோ
இன்று நான் யாரோ
நீ யாரோ ஆனோம்
உடலில் சரிபாதி
உயிர் இங்கே காணோம்
கண் சிந்தும் நீரே
காதலுக்கு விலையோ - இது
யாரும் காணாது பூத்துதிரும்
கானகத்து மலரோ
தார் பழுத்த வேளை
வெட்டுண்டு சரியும்
தேன் வாழை மரமோ
காதலோ இது - நம்மை
காவு கொள்ளும் காலனோ
என் முச்சடங்கும் முன்னே
உன் முகம் காண்பேனோ
விழிவடிக்கும் நீரை
உன் விரல் துடைக்கும் நாள் வருமோ
......... நேருக்கு நேர் இனி .........
நரியனுர் ரங்கு செல் : 94420 90468