தமிழன் என்று சொல்லடா
அஞ்சா நெஞ்சன் தமிழன்
அறநெறி காப்போன் தமிழன்
வீறு கொண்டெழுவான் தமிழன்
விடைகாணாப் புதிராவான்தமிழன்
அகிம்சை வழியில் தமிழன்
அகந்தையை ஒழிப்பான் தமிழன்
நேர் வழி நடப்பான் தமிழன்
நேசக்கரம் கொடுப்பான் தமிழன்
நட்புக்கு உயிர் கொடுப்பான் தமிழன்
நலம் பல புரிவான் தமிழன்
தன் மானம் காப்பவன் தமிழன்
தன்னலம் பாராதவன் தமிழன்
பட்டங்கள் பல வென்றவன் தமிழன்
படைகள் பல கொண்டவன் தமிழன்
குணத்தினில் ஆரோக்கியமானவன் தமிழன்
குன்றினில் ஒளிவிளக்கு தமிழன்
தமிழன் என்று சொல்லடா ...............