தமிழை மறவாதே
தமிழா தமிழா
தமிழை நீ பேசு
தமிழே உந்தன்
சுவாச உயிர் பாட்டு
தமிழா தமிழை என்றும் மறவாதடா
தமிழால் என்றும் உன் தலைநிமிரடா
திசை இசை விசை என எங்கும் நீ கேளடா
உனை தனை உணர்வினை கூட்டும் மொழி பாரடா
தமிழ்தான் உலகில்
உலவிய முதல் ஆதிடா
மற்றவையெல்லாம்
பிறந்தது பிற்பாதியில்டா ...
செம்மொழியாக பிரைசூடும்
மொழிதானிது
செந்தமிழாக செவிதோறும்
தேன்பாயுது ...
தமிழா தமிழா
தமிழை நீ பேசு
தமிழே உந்தன்
சுவாச உயிர் பாட்டு
தமிழா தமிழே என்றும் உயிர் மூச்சுடா
தமிழை கொஞ்சம் உன்னில் அரங்கேற்றடா
இடம் பொருள் ஏவல் என பார்த்து பேசடா
இனியொரு அழிவில்லை என்று காட்டடா
பைங்காலம் பயின்ற
பைந்தமிழ் மொழியல்லவா
இலக்கியம் வரைந்த
சங்கத்தமிழ் அல்லவா ...
புலவர்களால் போற்றப்பட்ட
கண்ணித்தமிழ் தானிது
இசையினால் வளர்க்கப்பட்டு
இசைத்தமிழ் ஆனது ...
இத்தனையும் இருந்து
இதை நீ மறப்பது ஞாயமா
இதனால் கொஞ்சம்
தமிழில் பேச என்ன நாணமா
உன்னில் உயிர்பெற
உதிரத்தில் பிறந்ததால் பாவமா
இனியும் இல்லை
தமிழ்மேல் ஏதும் கோவமா ...