காதல் வந்தால் சொல்லியனுப்பு

உன் புன்னகையில் சிறையெடுத்தாய்
உன்னை காணும்போது ...
பூத்து குலுங்கும் இதயமலர்
கண்மறைந்தால் வாடுதடி
காதல் வலையில் மேகஊர்வலம்

உன்விழியில் முத்தமழையோ
மழைகானா பயிர் நானோ
எதைகண்டு விழுந்தேன் நானறியேன்
நீ வந்தால் தான் மீண்டெழுவேன்

பார்வையில் அமிலம் சுமந்து
என்மீது வீசி போனவளே
உன் பாதனியும் கோவிலடி
காலடி காண தவமிருப்பேன்

அன்னை பாசம் அண்ணன் பாசம்
தந்தை பாசம் தங்கை பாசம்
அத்தனை பாசத்தையும்
மொத்தமாய் சாய்த்தவளே

எங்கிருந்து வந்தாயடி
பெண்மையின் படைப்பில்
விழாத தேவனும் உண்டோ
பிரமனின் அஸ்த்திரமோ

வாழ்கையின் ஒளியாய் வா
மண்ணுக்கு மழையாய் வா
நதியாய் நளினமாய் நாம் நடந்து
சங்கமிப்போம் மீண்டும் மழையாய் மாறிடவே

எழுதியவர் : கனகரத்தினம் (28-May-14, 10:13 pm)
பார்வை : 151

மேலே