சுக்கு நூறு == பஃறொடை வெண்பா
![](https://eluthu.com/images/loading.gif)
இஞ்சி வளர்த்தேன். விளைச்சல் எதிர்பார்ப்பை
மிஞ்சி அளவுக்கு மேலாக, அஞ்சாமல்
சந்தைப் படுத்த முனைந்தேன். விலைதாழ்ந்து
குந்தகத்தை தந்ததனால் நெஞ்சம் வெடித்தேதான்
சுக்குநூ ராகியதே! ஈற்றிலே இஞ்சைநான்
தக்க பதமாய் உலர்த்தி எடுத்ததுமே
சுக்குக்கு நூறின்மேல் விலை.