சொல்லோசை

தேன் கொடுக்கும் தேளே நீ
தேன் கொடுப்ப தெப்படியோ?
தேள் கொடுப்பது தேனாகுமோ
தேள் கொடுக்கில் தேன் வருமோ?

வால் மீனின் உருவே நீ
வான் முகட்டின் வழிவந்து
வாள் முனையில் தேனெடுத்து
வாழ் நாளை வருடுகின்றாய்!!

மான் விழியின் மங்கையே நீ
மான் புள்ளியின் தங்கையா நீ
மான் வேட்டைக் காரனின்று
மான் உன்னிடம் வேட்டையானேன்!!

கண் கோடி வேண்டுமடி
கண் உந்தன் கருமை காண
கண் கடையும் போதுமடி- என்
கண் தடைகள் சிறுமை காண!!

பெண் உந்தன் பேரழகு
பெண் அரசி போலழகு
பெண் உலகின் விந்தையே நீ
பெண் முரசின் சிந்தையே நீ!!

என் வனத்தின் இன்ப முல்லை
என் மனத்தின் அன்பு எல்லை
என் குணத்தின் பிம்ப வில்லை
என் கணத்தின் நேர முள்ளே!!

வந்துவிடு என்னிடம்
வந்துவிடும் வசந்தங்கள்!
வந்த வுடன் நீ என்னிடம்
வந்தபயன் நானடைவேன்!!

வந்துவிட நீ என்னிடம்
நான் தொடுக்கும் சொல்லோசை
நாண் விடுக்கும் வில்லோசை
வந்து விடு நீ என்னிடம்

தந்து விடு தேன் என்னிடம்!!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Jun-14, 12:06 am)
பார்வை : 120

மேலே