தமிழே

நீர் சலனமதில் முழுமை பெறாத பிம்பமோ...நான்...
முற்று பெறாத காவியத்தின் வரிகளோ...நான்...
பௌர்ணமியாய் இருந்தும் ஒளியற்ற நிலவோ...நான்...
எங்கே - முழுமையும் முற்றும் ?
தேடாமலே ஒளிந்திருக்கும் இடமறிந்தேன்...
முற்றுப்பெற்று முழுமையடைந்தேன்....
எண்ணச்சிதரலில் வளமும்
சிந்தைக்கு சிறப்பும் தந்து
என் வரிகளுக்கு உயிரூட்டும்
நீ என்ன எங்கள் தமிழானவளா...
இல்லை எங்கள் தாயுமானவளா...
அழகிய வளைவு நெளிவுகளுக்கு
எங்கள் தமிழானவள் நீ உறவோ...
தேகம் சிலிர்க்கும் நெளிவுகளில்
என் மனமானவள் அவள் அடக்கமோ...
அடங்கி தான் போகட்டுமே...
உயிர் அடங்கும் வரை...
மற்றொரு பிறப்பெனினும்
காலனின் உறவெனினும்
தமிழானவளின் இடத்தான பற்று மாறுமோ...
உன்னை உச்சரிக்கும் நாவுகளுக்கு ஏதம்மா பஞ்சம்...
மூடனின் பார்வைக்கோ என் இனம் ஏளனம்...
குண்டு மழையா...ஏவுகணையா....
எதிலம்மா உனக்கு மரணம் ?
தீப் பிழம்பில் தீக்கு மரணமுண்டோ...
சித்தம் கலங்கியவன் அறிவானோ...
நித்தம் எம்மால் அவன் சிந்தைக்கு மரணம் என்று...
அவன் தேசத்தில் உனக்கு மரணமா?
பேதை அவன் அறிவானோ...
தேசம் தாண்டியும் விருட்சங்கள் வீறுக்கொண்டு வளர்வதை...
இனியும் வளரப் போவதை...
உழைப்பின் வியர்வைக்கு
பொற்காசுகளே தட்சணை - எனின்
எம் இனத்தின் இரத்த வியர்வைக்கு
அவன் சிரமே தட்சணை...
- பவித்ரமலர்...