பவித்ரமலர்... - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பவித்ரமலர்... |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 238 |
புள்ளி | : 40 |
காரணமின்றி காயப்படுத்தினாய்...
கரணம் அறியாமலேயே காயப்பட்டேன்...
நீ காயப்பட கூடாது என்பதற்காக...
அன்று பேசியே உன் தவறுகளை
மறைத்து வென்றவனும் நீ தான்...
இன்று பேசாமல் மௌனத்தால்
என் உயிரை சிதைப்பவனும் நீ தான்...
இன்னும் எதனை கற்களால் உன் இதயம் உடைப்படுமோ...
உடைப்பட போகிறதோ தெரியவில்லை...
ஆனால் ஒன்று அத்தனை காயத்திற்கும்
நானே மருந்தாவேன் மறந்துவிடாதே...
யாசிக்கிறேன் இறைவனிடம்...
நினைவில் உன்னை நேசித்து...
உயிரில் உன்னை சுமக்கும் வரமே
போதும் என்று...
தெரிந்தே நம் காதலை தொலைத்து விட்டாய்...
நீ தொலைத்து விட்டாலும்
தொலையாத உன் நினைவில்
தினம் தினம் தொலைந்து போகிறேன் நான்...
நொடிப்பொழுதும் நினைவில்
இருந்து விலகி விடாதே....
என் இதயம் சுவாசிக்க மறுத்து விடும்...
சுவாசமான நீ சுவாசிக்க இல்லாவிடில்...!!
நீ விட்டு சென்ற பாதையில் நிறைந்திருகிறது...
வேதனைகளும் வலிகளும்...
எனினும் இன்பமாய் இதயத்தில்
சுமந்து பயணிக்கிறேன்...
பாதைகளை வகுத்து சென்றவன் நீ என்பதால்...!!
இன்றும் கடற்கரை மணலில் அவன் பெயர் எழுதி பார்ப்பது சுகமாய் இருக்கிறது...
என் எழுபதுகளில் நான் இருப்பேனோ தெரியாது...
அன்றும் என் ஊன்றுக்கோல் துணை கொண்டாவது அவன் பெயர் எழுதி விடவே மனம் துடிக்கும்...
உலகின் அழகன் நானே!
என்னழகி சொன்னாள் தானே!!
என் முகத்தின்
அறிமுகம் அறிந்தேன்
அவள் சேதியில்
சொன்னதும் உணர்ந்தேன்...
ஆயிரம் பெண்கள் சொன்னது
ஆயினும் மனதோ வெறுத்தது...
அவளின் ஒருசொல் கண்டதும்
அனைத்தையும் நினைத்தது
மனதோ மாற்றம் கொண்டது
தனியே ஏனோ நகைத்தது...
முகத்தினில் வெளிச்சம் நிலைத்தது
அவளின் வார்த்தை வருடியதாலோ
இரவினில் தூக்கம் தூங்கியது
இனிவரும் காலம் என்னாவது?
இந்த ஜென்மமோ
எனது முதலாவது
மீதி இருக்கு ஆறானது
என்றும் நினைத்து
நான் வாழ்வேன்
என்னழகி சொல்லிய
ஒரு சொல்லில்...