உந்தன் நிழலை

உந்தன் நிழலைக்
கூட
நெருங்காமல்
விலகி நிற்கிறேன்
நிஜமாக
நீ என்னை
ஏற்று சம்மதம்
சொல்லும் வரை....
மனசில்
உள்ளதை
மறைச்சு
வைச்சு...எனை
முறைச்சுப்
போற பெண்ணே
நீ போகும் வரை
அல்ல....நான்
போகும் வரை
உன்னினைவுகளோடு
தானிருப்பேன்.....
தோன்றும்
எண்ணங்களில்
எல்லாம்
வண்ண வண்ணமாய்
வந்தமரும்
என் தேவதையே
கண்ணன் படும்
அவஸ்தைகள்
உன் கண்ணில்
படவில்லையா..?
மலர்ந்த
காதல்
பூவே....
உதிர்ந்து
போகாதே....மண
மாலையாகி
மறுபிறவி
எடுத்து
வா..!!