ஒத்தயடி பாதையிலே

ஒத்தயடி பாதையிலே
வழி நடையா போகுறவளே
சின்ன பொண்ணு....!

ஓர விழிப்பார்வையிலே
நீ பார்க்குறப்ப, எம் மனசு
என்கிட்டே இல்லே கண்ணு

ஓரத்திலே, நீ ஒதுங்கி,
ஒதுங்கி நடக்கையிலே,
தூரப்பார்வை பார்த்து நான்
சிரிக்கையிலே

ஒரு மாதிரி தான் ஆகுதடி
எந்தன் உணர்வுகள், அந்த
பாதிப்பினால் நெஞ்சினிலே
சுகந்தங்கள்

ஓடும் நீரும் வாயக்காலிலே
நின்னு பாத்து சல, சலக்குது,
ஏளனமாய் என்ன பார்த்து
சிரி, சிரிக்குது

ஒன்னாக சேர்ந்துகிட்டால்
நீயும் வந்து என்னோட, ஒய்யார
வாழ்வு தருவேனடி நான்
உனக்கு செல்ல கண்ணு

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (16-Jun-14, 6:48 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 105

மேலே