காதல் பூ

உணர்கிறேன் அவளை கடந்ததும்
சுகமாய்.
கலைகிறேன் அவளை பிரிந்ததும்
மேகமாய்.
மறக்காத நினைவும் மறிக்காத உயிரும் நிலைக்குமா.
காற்றின் அடர்த்தியில் மழைநீர் பொழியும்.
இதயத்தின் அடர்த்தியில் விழிகள்
நனையும்.
விபரம் கொள்ளாத உறவில் விரிசல் ஏனடி.
விரைகிறேன் விரைவு பேருந்தாய்
வழித்தடம் கொடு உன் நிறுத்தத்தில் மட்டும் நிறுத்த!!!