புரியுமே தெரியுமே- நாகூர் லெத்தீப்
சிரிக்கிறாள்
சிதைக்கிறாய்
என்னை ஒருகணம்.........!
பார்வையால்
நீ தொடுக்கும்
அசைவு எனக்கே
புரியுமே தெரியுமே........!
நீ விலகிட நான்
அனுமதிப்பேனா
என்னை விட்டு.........!
மறவாமல்
நான் இருக்கிறேன்
உன்னை மனதோடு
நான் சுமக்கிறேன்........!
உன்னை நீ
வெறுத்தாலும்
நான் வெறுப்பதில்லை
உன்னை விட்டு
பிரிவதில்லை
என்றுமே..........!
வருவாயா
எனை சுமப்பாயா.......!
எனது வாழ்வை
உனக்கு கொடுக்க
வைத்துருக்கிறேன்
நீ என்னோடு
வாழ்வதற்கு.........!