புதுபயணம்

ஏ மனிதா!
ஏன் இந்த சோகம்
புரியவில்லை எனக்கு
ஈரைந்து திங்கள் சுமந்த - உன்
தாய் மடி தனில் தவழும் சந்தோசம்
ஏன் இல்லை உனக்கு
பல நூறு திங்கள் சுமந்த - நம்
தாய் மடி தனில் தவழும் போது
ஒன்றை மட்டும் புரிந்து கொள்
பிறப்பு இறப்பு என்றெல்லாம் - இல்லை
ஈரைந்து திங்கள் சுமந்தவளுக்கு செய்த
கடமை முடிந்தேறியது
பல நூறு திங்கள் சுமந்தவளுகாக
கடமையை செய்யும் புதுப்பயணம்
கலக்கம் வேண்டாம்
கண்ணீர் வேண்டாம்
நம்
புது பயணத்திற்கு
புன்னகையோடு
புறப்படலாமே.............

எழுதியவர் : வினோத்குமார்.ச (4-Jul-14, 4:52 pm)
சேர்த்தது : ச.வினோத்குமார்
பார்வை : 102

மேலே