தன்னலம், சுயநலம், கேவலம்
தன்னலம் சரி தான்
ஒரு அளவு வரையில்
தன்னலம் அளவுகள்
மீறினால் அது சுயநலம்
தன்னலம் அடுத்தவரை
கெடுத்தால் அது மகா கேவலம்
சுதந்திரம் கொள்வது,
உனக்கு நல்லதை தேர்ந்தெடுக்க
அது தன்னலம்
சுதந்திரம் வெல்வது
அடுத்தவருடையதை, உன் நலம்
வேண்டி, அது சுயநலம்
சுதந்திரம் கொல்வது
எவருடயதையும், உன் நலம்
மட்டும் விரும்பி, அது கேவலம்...!
தன்னலம் தன்னை காக்க...!
சுயநலம் தன்னை மட்டும் காக்க...!
கேவலம் அடுத்தவரை கெடுத்து
தன்னை காக்க....!