விடுமுறை சுமை
ஆசைகள் அடக்கியே
அமைந்த என்வாழ்க்கை
அமைதிகேட்டு துடிக்குதடி
உன் அன்பைத்தேடி
உன் கடைக்கண் பார்வையிலே
உண்மைக்காதலை உணர்ந்தேனடி
நீ என்னை விட்டு அகலும் வரை
பிரிவுகள் விடுமுறை மட்டுமெனே
பிஞ்சுஉள்ளம் பிரிய மறுக்குதடி
நாளை சந்திக்கவே இன்று
நடைகட்டுகிறேன் உன்
முகவரியை தேடி பேருந்திலே