கனா காலங்கள்

வங்க கடல்
சாரலில்
வானவில்லாய்
தோன்றியவள் !
நூற்றி ஐம்பது ஆண்டாய்
அழகி பட்டம்
பெறுபவள்..
சென்னை பல்கலைகழகம்
இவள்...

அலைகளாய் வந்து
கல்லூரி வாசல்
நனைக்கும்..
சுடிதார் அணிந்த
தேவதைகள் கூட்டம்!

நொடி முள்ளாய்
சுற்றி வந்த
சிற்றுண்டி தட்டுகளில்
எங்கள் நேரங்கள்
திருடப்பட்டது..

செமஸ்டர் மழை
வந்தால்
நூலகத்துகு
ஜலதோஷம்..

வட்டமிட்டு
அரட்டை அடிக்கும்
நண்பர்களுக்கு..
குடைபிடித்து
சந்தோஷ பட்ட
மரங்கள்...

சண்ட எதாச்சு
வந்த...
கைதான் பேசும்..
கடலை போடா
பிகரு கிடைச்ச..
கை பேசி பேசும்...

பிரேக் இல்லாம
பறக்கும்
ராக்கெட்...
கவலை இல்லாம
பறக்கும்
கல்லூரி லைப்..

நியூட்டனே!
உன் விதி
நட்புக்கு முன்
பொய்யானதே !
சேரும் பொது
இருந்த
சந்தோஷத்தை விட
பிரியும்போது
இருக்கும் கஷ்டம்
அதிகமாக இருகிறதே!

முதன் முதலாய்
என் விழிகள்
அமிலத்தை
சுரக்கிறது..
பேர்வெல் பார்ட்டியில்....!

எழுதியவர் : சிவா தமிழ் (26-Jul-14, 4:32 pm)
Tanglish : kanaa kaalangal
பார்வை : 105

மேலே