கவிஞர்களின் பணிவான கவனத்திற்கு
எங்கேயோ அடித்தார்கள் ...
எரிமலையாய் எழுந்து
எழுதினேன் கவிதை .
என் தேசத்தில் அடித்தார்கள் ...
ஏகாதிபத்தியம் எதிர்த்து
எழுதினேன் கவிதை.
என் ஊரில் அடித்தார்கள் ...
எமகாதர்களை இழிந்து
எழுதினேன் கவிதை.
என் தெருவில் அடித்தார்கள் ...
ஈனர்களை பழிந்து
எழுதினேன் கவிதை.
என் தோழனை அடித்தார்கள் ...
எப்போதும்போல் அப்போதும்
எழுதினேன் கவிதை .
என்னை அடித்தார்கள் ...
எல்லோரும் வந்து
எழுதினார்கள் கவிதை .