வேண்டும் விடுதலை கவிஞர் இரா இரவி

வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

மனிதஇனம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லா !
உயிரினங்கள் யாவையும் விரும்புவது விடுதலை !

எந்தப் பறவையும் கூண்டை விரும்புவதில்லை !
எந்த விலங்கும் கூண்டை விரும்புவதில்லை !

மனிதர்கள் பிறர் ஆதிக்கத்தை விரும்புவதில்லை !
.மனிதர்கள் பிறருக்கு அடிமையாக விரும்புவதில்லை !

விட்டு விடுதலையாகிடவே விரும்புகின்றனர் !
கட்டுண்டு துன்பத்தால் வாடுவதில் உடன்பாடில்லை !

விடுதலை போராட்டத்திற்கு வரலாறு உண்டு !
விடுதலைக்கு அறவழி ஆயுதவழி இரண்டுமுண்டு !

அறவழியில் போராடி சாத்தியமாகாத போது !
ஆயுதவழிக்கு ஆயத்தமாகின்றனர் சிலர் !

தன்னைப் போலவே பிறரை நேசித்தால் !
தரணியில் ஆண்டான் அடிமை இருக்காது !

உயர்ந்தவன் என்று எண்ணி பிறரைத் தாழ்த்துவதால் !
உயரம் இழந்து கீழே வீழ்ந்து விடுகின்றனர் !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் !
உணர்ந்திட்டால் சண்டைகள் இல்லை !

உனக்குள்ள உரிமைகள் அனைத்தும் பிறருக்கும் !
உண்டு என்பதை புரிந்தால் நடத்தல் நன்று !

வானிலிருந்து வந்தவர் எவருமில்லை !
மண்ணிலிருந்து வந்தவர்தான் எவரும் உணர்க !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Aug-14, 9:14 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 67

மேலே