காதல் தந்த சிதறல் - மணியன்

கள்ளுண்ட மயக்கத்தில்
கதிரவனும் மேற்கினில்
கடலினில் அமிழ்ந்த மாலை . . . .
காரிருள் குவிய
கண்ணிரண்டும் கருந்திரையாய்
காட்சிகள் கரையும் வேளை . . . .
கானகத்து குயிலினமும்
கானம்பாடிக் களித்து
கண்மூடி அயர்ந்த வேளை . . . .
காலமெனும் நதியினிலே
கலந்தோடிக் கரைதேடி
களைப்புடன் கண்ணயர . . . . .
கதவு திறந்துக்
கனவு ஒன்று
கட்டிலிலே மெட்டமைக்க . . . . .
காளை எந்தன்
கடுகு இதயம்
கானகமாய் விரிந்தசைய . . . .
களுக்கென்று சிரித்து
கார்மேகக் குழலாள்
கண் நுழைந்தென் இதயம் அமர . . . .
காலை வரைக்
காளை எந்தன்
கண்ணுறக்கம் தொலைந்தோட . . . .
கனவு வேண்டும்
கன்னியே என்னைக்
கணநேரம் துயில விடு . . . .
கனவிலேனும் உன்னைக்
கண்டு தினம்
களிப்பு தரும் கனிவு தந்து . . .
காதலன் என்
கரம் பிடித்து
கடலலைபோல் தவழ்ந்து வாடி . . . .
கவிதைக்கேனிந்த உதறல் . . . .
கண்டபடி உளறல் - இதுதானோ !. . .! , , !
காதல் தரும் சிதறல். . . . .
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*