எனக்குள் ஒரு கேள்வி

காடுகளில் நான் கண்டதில்லை
பாதுகாப்பாய் சிறு வேலிகூட !
நாட்டிலோ ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கிறது
ஆளுயர மதில் சுவர்கள் !
பதில் சொல்லுங்கள்
யார் பயங்கரமானவர்கள் !
காட்டில் வாழும் விலங்குகளா !
நாட்டில் வாழும் மனிதர்களா !