உன் விரலுக்குள் என் வாழ்வுகவிதைப்போட்டி

உன் விரலுக்குள் என் வாழ்வு...
எனது நடை வண்டி..நீ
கரிசன களிம்புக்கரன்..நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்..!

உன் அன்புக்குள் என் தஞ்சம்
என் பிறப்பின் ஆதாரம்..நீ
படைப்பாளி ஆனாய்..நீ
மகனின்று மனிதனாக்கி என்னை...!

உன் உணர்வுக்குள் என் நகல்
என் வாழ்வின் வழிக்காட்டி..நீ
நான் வாழ முன்மாதிரியானாய்..நீ
தாழ்மையிலும் நேர்மையை கற்றுவித்தாய் எனக்கு...!

உன் வழித்தடமே என் பாதை
எந்தன் நற்துணிவுக்கு வித்திட்டவன்..நீ
என் முயற்சிக்கு உறுதுணை..நீ
அனுபவத்தில் ஆசானாய் தெரிந்தாய் என்னுள்..!

உன் அரவணைப்பு என் சொர்க்கம்
என் அசைக்கா நம்பிக்கை..நீ
என் பூரணதேவைக்காய் வாழ்ந்தவன்..நீ
தியாகங்களிலும் நேசம் வைத்தாய் என்மீது..!

உன் புரிதலுக்குள் என் மகிழ்ச்சி
என் வெற்றியில் பின்னிற்றவன்..நீ
என் தேடலில் முன்னிற்றவன்..நீ
இன்றும் வீரனாய் உள்ளத்துடிப்பில் பேசுகிறாய் என்னோடு..!

உன் ஆறுதலில் என் மீட்பு
என் உணர்வுகளை நேசித்தவன்..நீ
நான் தளருமிடம் தோள்கொடுத்தவன்..நீ
என் முதல் நண்பனாய் வாழ்ந்ததுண்டு என்னில்...!

உன் பிரிவினில் என் மீளாயிழப்பு
தந்தையென நிரப்பாயிடம் பிடித்தவன்..நீ
நினைவினில் மறையாதிருப்பவனும்..நீ
வாழ்ந்தநாட்கள் வாழும்வரை மறக்கபடுமோ என்னால்..!

எழுதியவர் : கவிபாரதி (10-Aug-14, 11:57 pm)
பார்வை : 73

மேலே