உண்மையில் உள்ளதா சுதந்திரம்
ஓட்டுப் போட்ட இயந்திரங்கல்
இந்தியனின் கோவணத்தை உருவுது
ஜனநாயகமோ அரசியல் வாதிகளின்
ஊழல் தோற்று நோயால் புண்ணாகிப்
புரையோடிக் கிடக்குது ..!
ஆறுகளும் மலைகளும் இங்கு
அவனவனுக்கு அடகுப் பொருளானது
இந்தியக் குடிமகனுக்கோ
நடுத் தெருவே வீடானது ..........!
மதமென்னும் மாய வலையில்
மனிதம் மாட்டிக் கொண்டது
அறியாமை இருட்டுக் குகைக்குள் அது
அடைப் பட்டுத் தவிக்குது ..............!
கல்வி இன்று காசுக்கு விலைப் போனது
கலை மகள் வீணையோ அடகுப் பொருளானது
குழந்தைத் தொழிலாளர்களாய் சிறுவர்கள்
கொத்தடிமைகள் ஆனது ..................!
சிறகடித்துப் பறக்க வேண்டிய பிள்ளைகள் எல்லாம்
சிவகாசிப் பட்டாசு கிடங்கில் சின்னா பின்னாமானது....!
ஜாதிச் சங்கிலியில் பாரத அன்னையின்
கைகள் கட்டப் பட்டது - ஆதிக்க வெறியர்களால்
அது கோமாவில் கிடக்குது ...................!
கெட்டுப் போன சுற்றுச் சூழலால் மழையும்
மண்ணுக்கு வர அடம் பிடிக்குது .....!
மழை இங்கு வற்றிப் போனதால் -சொட்டுத்
தண்ணீருக்கு மகாபாரதப் போரே நடக்குது .......!
ஓட்டையான சட்டங்களால் நேர்மையின்
சட்டை தோல் உரிக்கப் படுது ..................!
அரசியல் வாதிகளால் இந்திய இறையாண்மை
கற்பழிக்கப் படுது.................!
நல்ல நல்ல திட்டங்களும் ஒத்திவைப்பு தீர்மானத்தால்
சோரம் போயி கிடக்குது .............! அதிகார வர்கத்தின்
அலட்சியப் போக்கால் அந்நிய முதலீடு இங்கு
அசுர வளர்ச்சி அடையுது .................!
இந்திய ஜனநாயகத்தில் பெண்ணியம் அழிக்கப் படுது
பாலியல் பலாத்காரதிலும் வன் புணர்ச்சியிலும்
சாகடிக்கப் பட்ட பெண்களின் பிணங்கள் மரக்
கிளைகளில் தொங்கவிடப் படுது.......................!
நண்பர்களே ..!
நாம் வாங்கிய சுதந்திரம் எங்கே போனது ?
சுதந்திரம் என்ற பெயராலே -இங்கு
சுரண்டல் தானே நடக்குது ...............!