தவமா வரமா உன் வார்தையில்தானடி 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே...
உன்னை நிழலாக
தொடர்ந்து...
உன் மனதில் குடி இருக்கும்
என்னை...
நினைவுகளில்
தேடுகிறாயடி...
நேரில் வரும்போதெல்லாம் முகம்
மறைத்து கொள்பவள் நீ...
என்னை பார்க்க ஆசை
இருந்தால் கை வைத்து பாரடி...
உன் இதயத்தில்...
நான் துடித்து கொண்டு
இருப்பது...
உன் அன்புக்காக என்பது
உனக்கு புரியுமடி...
உன் நினைவுகளில் நான்
வாழ்வதற்கும்...
உன்னோடு சேர்ந்து நான்
வாழ்வதற்கும்...
ஒரு மாற்றம்தானடி...
உன்னோடு நான் வாழ்வது
எனக்கு கிடைக்கும் வரமடி...
உன் நினைவோடு
நான் வாழ்வது...
நான் வாங்கிய தவமடி...
தவமா வரமா உன்
வார்தையில்தானடி...
காத்திருப்பேன் சில
நாட்கள் மட்டும்.....