பாவி மவ

உன் விழிப்பார்த்து
என் மொழி மறந்தேன் !
செந்தமிழ் துரோகி என
வீண் பழி சுமந்தேன் !
பசி கூட எடுக்கலையே
பாவி மவ
முகம் பார்த்து !
கவிதை ஒன்னு
எழுதட்டுமா
ஏக்கம் எனும்
பொருள் சேர்த்து !
உனை
விழி திறந்து
பார்த்தேன்,
காதல் பிறந்ததடி !
மனம் திறந்து
பார்த்தேன்,
கவிதை பிறந்து
பிறந்தடி !
உன் கை கோர்த்து
நடந்தால்
புது வாழ்க்கை
பிறக்குமடி !
காதலியே
எனை
காதலியேன் !

எழுதியவர் : கவிதை வியாபாரி 7845392987 (11-Jun-10, 2:28 pm)
சேர்த்தது : ONLYTAMIL
பார்வை : 547

மேலே