என்னில் மட்டுமே நீ-வித்யா
என்னில் மட்டும் நீ-வித்யா
இதுதான் காதலென்று
வரைமுறைப் படுத்தா
நானாகிய உன் பேருலகம்
என்னிலே தொடங்கி
என்னிலே முடியட்டும்..............!!
நீ என்று நீளும்
ஒவ்வொரு நீட்சியும்
நீண்டுகொண்டே......இன்னுமின்னும்
அதை நோக்கியே நீளும்
நானும் என் காதலும்..........!!
தொலைவிருந்தும் நெருக்கமான
அணைப்புகளும்
அருகிலிருந்தும் தொலைவான
முத்தங்களும்-பரிமாறு.....!!
முந்தானைக்குள்
மூழ்கிப்போ....
நானுறங்க கதைவிடுத்து
காதல் பேசு......!!
நீ எதை நேசித்தாலும்
நானே அதுவாக மாறிடும்
வரம் கொடு.....!!
தொலைதலின் பொருட்டு
மகிழ்ச்சியும்
அழுதலின் நிமித்தத்தில்
ஆனந்தமும் செய்........!!
சப்தங்களெல்லாம்
மரணிக்கும்படியாக
என் காதோரத்தில்
கிசுகிசுத்துப்பேசு.......!!
என்னருகே நீயில்லா
நொடிகள் நரகமென
நீளட்டும்.......!
எனை தொடரும்
நிழலாய் தந்தையாய்.....
பேசாத கதையெல்லாம்
பேசிமுடிக்க தோழனாய்.....
எனையே முழுதாய்
உள்வாங்கும் கணவனாய்........
நீ வேண்டும்.........!!
உன்னை
நாள்தோறும்
என் கருவறையில் வைத்துப்பூட்டி
என்னில் மட்டுமே நீயென நான் வாழவேண்டும்......!