திருவாரூர் எக்ஸ்பிரஸ்
நேர் நின்றால் காய்
நிரை நின்றால் கனி
தேர் நின்றால் அழகாமோ ?
தேர் ஓடினால் அழகு
ஊர்கூடிப் பார்க்கும் அத்தேரை
திருவாரூரில் சென்று பார்த்தால்
எத்தனை மகிழ்வு !
யார் அங்கே ?
கணினியில் ஒரு கவிதை...
இல்லை இல்லை
தொடர் வண்டிக்கு
ஒரு பயணச் சீட்டு
விரைந்து எடு !
~~~கல்பனா பாரதி~~~