வேடந்தாங்கல் தேவதை
உன் கண்கள் இரண்டும் பருந்தின் கூர்மை
அதில் நான் கண்டிருப்பது ஒன்றே அது நேர்மை
கிளியின் அழகு உனது மூக்கு
நீ என்றும் தவறியதில்லை வாக்கு
பஞ்சவர்ணம் உனது நிறம்
அதை காண போதாது நேரம்
பகுத்தறிவதில் நீ ஓர் அன்னம்
உன்னை அறிவதில் சுற்றும் என் எண்ணம்
உனது பற்கள் வைரக் கற்கள்
அதைவிட மதிப்பானது உனது சொற்கள்
உன் குரலை நினைவுப்படுத்துவது குயில்
உன் உருவை நினைவுப்படுத்துவது மயில்
!! மொத்தத்தில் நீ சிறைப்பிடிக்க படவேண்டிய ஓர் வேடந்தாங்கல் அறிய வகை அழகு!!