காதலிப்பாய் என்ற ஏக்கத்துடன்
ஒத்துகொள்வாயோ
மறுப்பாயோ அறியேன்.....
சிரிபாயோ
சிந்திப்பாயோ அறியேன்
மௌனம் சாதிப்பாயோ
மனம்விட்டு பேசுவாயோ அறியேன்
கிடைபாயோ இல்லை
உன் மன அழைப்பிதழ் கொடுப்பாயோ அறியேன்
எனக்கு தெரிந்தது எல்லாம்
உன்னை நேசிக்க மட்டும்
உன் நேசம் மட்டும்
உன்னால் வரும் கவிதைகள் மட்டும்
வரும்போது வரட்டும்
உன் காதலும்.........
அதற்கான சம்மதமும்
அதுவரை தினம்
ஒரு முறை வந்து
தரிசனம் தந்து போ
என் விழிகள் ஏமாறாமல் இருக்க ...........
காதலுடன்
காதலிப்பாய் என்ற ஏக்கத்துடன்
நான் .........