கிறுக்கல்கள்

என் இரவுகள்
விடிவதற்கு முன்
என்னை பதம்பார்க்கிறது..
காற்றோடு இசைமீட்டும்
என் விரல்களை
எழுதுகோலை கொண்டு
கவிதை எழுதுவதற்காக..!
கற்பனையில் நினைத்ததை
தமிழில் நனைத்து எழுதுகிறேன்
என்னுள் நனைந்த வரிகளை கொண்டு...
எழுகிறேன் கவிதை
இல்லை இல்லை கிறுக்கல்கள்...!
என் வரிகள் மட்டும்தான் கிறுக்கல்கள்
நான் கிறுக்கன் இல்லை..
ஒருவேளை நீங்கள் நினைத்தால்
இரு(ற)ந்துவிடுகிறேன்
தமிழ் கிறுக்கனாக..!
தோழர்களே.. தோழிகளே..