மழையே
![](https://eluthu.com/images/loading.gif)
அடி மழையே
உன் சிருங்கார முத்தங்கள்
மண்ணோடு!
உன்னை காண காத்திருக்கிறான்
மண் மன்னன்
வெகு காதலோடு
மழையின் கந்தர்வ மணத்தில்
வண்ண வண்ணமாய்
சிரிகின்றன மலரென்னும்
மழலைகள்.
பூமியே புத்தாடை
பூண்டுகொண்டது
மலர்களால்
குருவிக்கு குயிலுக்கும்
குளிர் தந்தாய்
புல்லுக்கும் பூவுக்கும்
முத்தம் தந்தாய்
எத்தனை நனைந்தாலும்
எனக்கு மட்டும் இதம் தந்து
சுகம் தந்தாய்
என் இமை தாண்டி,
இதழ் தாண்டி
இன்பம் தரும்
உனக்காகவே காத்திருக்கிறேன்
மீண்டும் நனைய ,
இல்லை இல்லை
இன்ப முத்தம் வாங்க.