காதல் எனக்கு சாபமடி - இராஜ்குமார்
தேடி வந்தேன் நீயில்லை
எங்கே சென்றாய் சொல்லிவிடு
மீண்டும் வந்தாய் அவ்விடமே
எங்கே சென்றேன் நான் இப்போ ..?
ஓடி செல்கிறேன் பல இடத்தில்
நாட்கள் தொலைந்தது நிமிடத்தில்
காலை தினமும் கண்விழித்தும்
இரவு என்னை வெறுக்கிறதே.... ?
விடுதி சென்றவள் நீ பெண்ணே
அழுது நின்றவன் நான் கண்ணே
அது குறிகிய கால இருப்பிடமா ..?
காதல் கலைக்கும் ஓர் முகமா ..?
தடைகள் தழுவிய காலமடி
நடைகள் மறந்தது கால்களடி
உடையில் உந்தன் வாசமடி
காதல் எனக்கு சாபமடி ..!!
- இராஜ்குமார்
நாள் : 4 - 6 - 2011