கனவு

குரங்குத்தனமும்
கோமாளித்தனமும்கூட
நடிப்பாகிப் போனால்
கண்டு ரசித்து
கொட்டிக் கொடுக்கவும்
கோயில்கட்டி வழிபடவும்
லடசக்கணக்கில்
ரசிகர் பட்டாளம் இருந்தால்
நானுங்கூட நடிப்பேன்
அதிர்ஷ்டக்காற்று
என்பக்கம் வீசினால்
மூக்கும் முழியுமாய்
எம்ஜிஆர் சிவாஜி போல்
எனக்கில்லை அழகு
சூர்யா போலவும்
அழகாக நானில்லை
இருந்தாலும்
எனக்கும் வாய்ப்பு
எவரேனும் தந்து
முதல்படத்தை ஓடவைத்தால்
தேடிவரும் வாய்ப்புகள்
இமயத்தின் உச்சிக்கே
எனையழைத்துச் செல்ல
ஆட்சி பீடத்தையும்
எளிதாகக் கைப்பற்றி
கோட்டை கொத்தளத்தில்
கொலுவீற்றிருப்பேன்.
கனவு நனவாகி
சாதனை படைத்தவர்கள்
பாரினிலே பலருண்டு
என்கனவும் நிஜமாகும்
நாள்பார்த்துக் காத்திருப்பேன்
-------------------------------------------------------------------