தடங்கல்

ஒற்றை எதிர்ப்பு என்றில்லை,
சொல்லப்போனால் அதுவே,
ஆதரவின் சதவீதம் !
போர்க்களம் புகும் இதயத்தின் பெருந்துணை,
தைரியமன்றி வேறு எதுவாயிருக்கும்?
முட்டி மோதி வெற்றிக்கான,
தவியாய் தகிக்கும் துடிப்பு,
தட்டி வீழ்த்தும் தரையை தேய்க்கும்,
எட்டருந்து சூழும் இருள் பாய்ச்சல்களை,
புறப்பட்டு கிளம்பியபின்,
சிறைப்படும் எண்ணங்கள் இரா,
முயக்கமே திண்ணம்,
திட்டம் வகுத்து கிளர்ந்து கிளம்பையில்,
கூடவந்த ஆர்பரிக்கும் சேனைகள்,
கூடுகளைவிட்டு வெளிவருதலில்லை,
பெரும்பாலும் நிஜங்களில்,
அங்கே கேள்விக்குறியாகும் உன்,
நிஜங்களின் வேட்டை நிழலில் அடிபட்டு,
எனில்,
நீ ஏறப்பார்த்தது பிறன் முதுகிலா?
வேண்டாம் அத்ததகை முயல்வுகள்,
முடிவெடுத்துவிட்டால்,
சிறைப்படாதே எதற்கும்,
அங்கே உன் செயல்பாட்டின் சிறகுகள்,
அடுத்தவன் தாமதத்தில் ஐயப்பட்டு நிற்றல் ஆகா,
மேலும்,
உன் உள்ளுணர்வும் உனை தடுத்து தங்கவைக்கக்கூடா,
தடங்கல்கள் உனக்கு சர்வசாதாரண மடங்கல்கள்,
முண்டியடித்து புழுதி கிளப்பு,
அன்பனே !
நீ ஜெயிக்கிற குதிரை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Oct-14, 8:54 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 69

மேலே