பழைய சோறு

ஆத்தா வடிச்ச சோறு
ஆறி போனதால
பழைய சோறாச்சு !

சோற்றின் மணமா?
ஆத்தாவின் கை மணமா ?
கேள்விக்கு விடை தெரியலே !

தண்ணியை
சும்மா பிழிஞ்சு
சக்கையாய் சோற்றோட
ஒரு உப்புக்கல் போட்டு
பச்சை மிளகாயை
இடையிலே காரத்துக்கு வைச்சு
துன்ன வாயில் போட்டுக்கு முன்
வாயிலிருந்து நீர்
சோற்றிலே விழுந்துடுதுங்க !

அமிர்தம் ன்னு சொல்றாங்களே
அது இது தானுங்களா ?

வசதி இல்லை
மோர் ஊத்தி சாப்பிட!

பழைய சோறு
வவுத்தை i நிறைக்கிற சோருங்க !

ஏழைகளுக்கு
உயிர் கொடுக்கிற சோருங்க !
சத்தான சக்தியை கொடுக்கும்
சோருங்க !
மூளையை
முடுக்கி செயல்படுக்க வைக்கின்ற சோருங்க !

எப்போதும் நாவிலையே இருக்குற சோருங்க !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (20-Oct-14, 10:49 pm)
பார்வை : 736

மேலே