காலங்கள் மாற்றிவிடும் காதல் காயங்களை 555

பெண்ணே...

தினம் கரையை தொட ஓடிவரும்
அலைகளை போல...

உன் மனதை தொட தினம்
தினம் ஓடி வருகிறேன்...

உன் மனதை தொட நினைத்த
போதெல்லாம்...

நான் மண்ணை
பார்கிறேனடி...

உன் வார்த்தைகளால்...

ஆழ்கடலை போல மௌனம்
மட்டுமே கொண்டது...

காதல் கொண்ட
என் மனம்...

அலைகள் கூட கரையை தொட்ட
சந்தோஷத்தில் திரும்பி செல்லுதடி...

உன்னருகில் ஓடிவந்த
போதெல்லாம்...

உன் முகம் காண
முடியாமல்...

மண்ணை மட்டுமே
காண்கிறேனடி...

உன் வார்த்தையில்...

உன் உறவு வேண்டுமென்றுதான்
ஓடிவந்தேன்...

என்னை உதறி தள்ளுவாய்
என்று நான் நினைத்ததில்லையடி...

விருப்பமில்லாத உன்னை
கட்டாயபடுத்த விரும்பவில்லடி...

இனியும் நீயே
நினைத்தாலும்...

இனி உன் கண்ணில்
படாமலே இருப்பேனடி...

காயங்களை காலங்கள்
மாற்றிவிடும்...

காலங்களை நம்பி
நான் தொடங்குகிறேன்...

என் பயணத்தை இனி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Oct-14, 3:07 pm)
பார்வை : 349

மேலே