நாம் எங்கே போகிறோம்

நாகரீகம் எனும் பெயரில் நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கிறோம்;
துரித உணவு எனும் பெயரில் துன்பங்களை முதுகில் சுமக்கிறோம் ;
சீர்திருத்தம் எனும் பெயரில் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறோம்;
பணம்மீது ஆசையால் பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் ;
வீடு எனும் மோகத்தால் விளைநிலங்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்;

சாதி,மதக் கொடுமைகளால் மக்களை சாகடித்துக் கொண்டிருக்கிறோம் ;
பாலியல் வன்கொடுமைகளை தட்டிக் கேட்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்;
எறும்பாய் உழைப்பவர்களை ஏளனமாய் பேசுகிறோம்;
ஆங்கில மோகத்தால் தாய்மொழியையே நிந்திக்கிறோம்;

விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தாமல் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்;
இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்காமல் இங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்;
இத்தனையும் செய்து எதிர்காலத்தில்" நாம் எங்கே போகிறோம்" ;
நாட்டை வல்லரசாக்க முயன்று கொண்டிருப்பவர்களே,
இங்கு மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் இதற்கென்ன செய்யப்போகிறீர்.

ச.வெங்கடேசன்(14-pb- 053),லயோலா கல்லூரி,சென்னை-600 034.

எழுதியவர் : ச.வெங்கடேசன் (21-Oct-14, 6:55 pm)
Tanglish : naam engae pokirom
பார்வை : 81

மேலே