கனவின் காலடிகள் - வினோதன்

தூரதேசத்தின் - வெளிர் பனி
முளைத்த சாலைகளின்
ஓரத்தில் - பூக்க எத்தனிக்கையில்
உறைந்து தூங்கும் மொட்டுக்கள்
விழியின் பின்கதவு தட்டியதுண்டு !

மணல்-கடல் மத்தியில்
புவியீர்ப்பு விசையை - புறம்
தள்ளி வளர்ந்த - கள்ளியின்
கூரிய முள்ளொன்று
மனக்கடல் குத்தியதுண்டு !

நீலத் திரவக் கூட்டத்தின்
முதுகேறி பயணிக்கும்
இனம் கானா மிதவையின்
குறுக்கு வெட்டுத் தோற்றம்
தோன்றி மறைந்ததுண்டு !

தன பிஞ்சுவிரல் மலர்ந்து
கை காட்டியபடி காணாமல்
போகும் - குழந்தையின்
முகம் - அழியாச் சுவடாக !

அச்சேற்றம் அதிகமென்பதால்
ஓர் முகம் மட்டும்
அநேக நேரங்களில்
அதி-தெளிவாய் தெரியும் !
யாரின் முகமென
உங்களுக்கும் தெரியும்தானே ?

ஒன்றுக்கொன்று உறவில்லா
ஓராயிரம் உலவுவதுண்டு
என் கனாச்சந்தையில் !
ஏதோ ஓர் உறவு இருப்பதாய்
அறிவியல் நம்புகிறது !
நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு
என் விழிகள் - கடந்து
சென்ற கனவுகளில்
பாதம் கடந்து பயணிக்கிறது,
ஏதோ ஓர் அகச்சுகத்தோடு !

எழுதியவர் : வினோதன் (4-Nov-14, 8:47 am)
பார்வை : 91

மேலே