இளையராஜா, கமல், அப்பா, நான்

கமலஹாசனின் பிறந்த நாளில் அப்பாவுக்காக எழுதியது.

ஆண்டு அவ்வளவாக நினைவில்லை ஆனால் நான் இரண்டு/மூன்றாம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்தேன்
பள்ளி பாப்பநாயக்கன் பாளையத்தில் வீடு சிங்காநல்லூரில் சற்று நீநீநீநீநீநீநீநீநீண்ட தூர பயணம்தான் சைக்கிளில் தான் பிக்கப் அன்ட் டிராப்.

பள்ளியில் இருந்து வீடு போகும்போது, ராஜா பாடல்கள் இன்றி அப்பா சைக்கிளை மிதிக்கமாட்டார். ரஜினி, மோகன், என மற்ற நடிகர்களின் பாடல்களை தாண்டி அப்பா பாடும் லிஸ்டில் அதிகம் கமல் & ராஜா காம்போ தான் இருக்கும்.

ஐ.... கமல் பாட்டு என்று தான் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தேன்... சாரி ராஜா சார்...

அப்பாவின் பாடல் லிஸ்ட் அலாதியானது.
சலங்கை ஒலியின் - இது மௌனமான நேரம், தகிட ததிமி,

வறுமையின் நிறம் சிவப்பின் - சிப்பி இருக்குது முத்து இருக்குது

சகலகலா வல்லவனின் - இளமை இதோ இதோ...

ராஜபார்வை, புன்னகை மன்னன் எனத்தொடரும் அப்பாவின் தேர்வுகள் எல்லாமே ரொம்பவே ரொமாண்டிக் ஆனவை.

நினைத்தாலே இனிக்கும் படத்தை கதையாகவே என்னிடம் நிறையமுறை சொல்லி இருப்பார்.
அப்பா நிச்சயம் எனக்குள்ள ஒரு கமல உணர்ந்திருப்பாருன்னு ஃபீல் பண்றேன். இதுலாம் உனக்கே ஓவரா இல்லையான்னு நீங்க கேக்கலாம் ஆனா அதான் உண்மை.

முதல் முறையா அவர எதிர்த்து பேசறப்போ அது எனக்கு தெரியாது ஓ'ன்னு அழுதேன். ஆனா உன்னால் முடியும் தம்பி படம் பாக்கும்போது அப்பா வேணும்னே நம்மள கோவப்பட வச்சு டெஸ்ட் பண்ணிருப்பாரோன்னு தோணிச்சு.

சலங்கை ஒலிக்காக டேன்ஸ் பயங்கரமா கத்துகிட்டாரு...
உன்னால் முடியும் தம்பிக்காக மிருதங்கம் கத்துக்கிட்டாருன்னு... அந்த படத்தை எல்லாம் காட்டாமையே சொல்லி வளர்த்தார் அப்பா.

அதுக்கப்பறம் நானே ஒரு செய்தி தொகுப்புல கமல் ‪#‎உடல்‬தானம் செய்தார்ன்னு போடவும், அப்படின்னா என்னான்னு கூகுள் பண்ணி படிச்சு காலம் கனிய காத்திருந்து 2013லParasparam Public Trust துணையோட நானும் உடல் தானம் பதிவு செஞ்சேன்.

ஒரு ஒரு விஷயத்தையும் கத்துக்கணும், மனசாட்ட்சிக்கு எதிரா நடக்ககூடாது, பகுத்தறிவு. அப்படி இப்படின்னு எல்லாத்தையும் கமல் அப்படிங்கற கருவி கொண்டு அப்பா எனக்கு ஊட்டியது.

அப்பாக்கு கமல பிடிக்கும், இப்போ நானும் கமல்...

Happy Birthday My Dear Attitude .

அன்புடன்
வெ.கி.ஜெகதீஷ்


07/11/2014

எழுதியவர் : ஜெகதீஷ் (11-Nov-14, 8:57 pm)
பார்வை : 182

மேலே