டிசம்பர் -6
கண்ணீர் நடுவினில்
செந்நீர் பருகும் ஓநாய்கள்
மனித உடலின் உதிரம் பருக
தேடி அலைந்தது காவி உடையில்
மதத்தின் பால் கொண்ட பற்றால்
மதம்கொண்டு முளைத்தது புற்றாய்
மனிதம் தொலைத்து மடமையை வளர்த்து
அகிம்சையை அழித்து ஆயுதமுடன் ஆயத்தமே
குருதி நிறமொன்றறிந்தும் குள்ளநரிகள்
குத்திக் குதறுது பிள்ளைகறியினை
தின்று தீர்த்தே பெருமேப்பமுடன்
நன்றே உரைக்குது யாவரும் சமத்துவமாம்
அன்றே...
ராமனும் பாபரும் அறிந்ததில்லை
முன்பே புதைந்தது யாரென்று
அன்பாய் உரைக்கும் கீதையிலும்
வம்பாய் அழிப்பது அநீதியென உரைத்தும்
உணராது உடைந்தது மனிதம்