விடியலைத் தேடி

இருள் அணைப்பில்
நான் -
ஒரு ரோஜா !
எனக்கு முட்கள் -
பாதுகாப்பிற்கு அல்ல !?

விடியலைப் பார்க்க
எனக்கு அனுமதி இல்லை !
பகலவன் போர்வையில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன் !
இரவின் பார்வையில்
விழித்துக் கொண்டிருக்கிறேன் !

தேசிய விடுமுறை நாட்கள் -
எனக்கு
காணிக்கை நாட்கள் ?
என் வீடு - வெறும் புறாக் கூடு !
வாடகைக்கு இதயம்
வழங்கும் - தேன் கூடு !

தினமும் எரிகிறேன்
எண்ணையின்றி - என்னை சுட்டு ?
சூழ்நிலைக் கைதியாய்
கரைகிறேன் - சுவர்களின்
பாதுகாப்பில் ?

கடக்க முயல்கிறேன் -
இவ்விருளை -
விடியல் ...?

எழுதியவர் : சு.ஈ. பிரசாத் (7-Dec-14, 8:39 am)
Tanglish : vidiyalaith thedi
பார்வை : 98

மேலே