வெட்கப்பட்டன
உன் வரவிற்காய் ஏங்கிய
என் நீண்ட இரவுகள் நிசப்தமாய்க் கரைந்தன
நீ வந்த நிமிடங்கள் உளமகிழ்வில்
வார்த்தைகள் வர மறுத்தன...!!
இதழ்கள் விரிய மறுத்த போது
உன் இதழ்கள் பற்றிக்கொண்டது
நீண்ட இரவுகளின் ஏக்கங்களைத் தனிப்பதில்
இதழ்கள் போட்டியிட்டுக் கொண்டன
ஏக்கங்கள் தனிந்த இரவின் தூக்கம் தொலைந்து கொண்டது
ஏக்கம் தனிந்த மகிழ்வு இருவருக்கும் இரவென்ன வெட்கப்படும??
ஆனால் வெட்க்கப்பட்டன
விடிந்து கொண்டதில் தனியே உடைகள்.!!