என் நிலை

படுத்தால்
கால் இடிக்கும் சுவர் !
நிமிர்ந்தால்
தலை இடிக்கும் கூரை !

கூரையை தாங்கி
பிடித்திருக்கும் ஒட்டடை !
இதுதான்
என் வீட்டின் நிலை !

இரவு நேரம்
வீட்டின் வெளியே
ஒற்றை நிலவு !
வீட்டின் உள்ளே
கூரையின் ஒவ்வொரு ஓட்டையிலும் ஒரு நிலவு !

பொழியும் மழையில்
என்னோடு சேர்ந்து
கண்ணீர் வடிக்கும்
என் வீட்டின் கூரையும்!

திறந்த வீட்டில்
நாய் புகுவதுண்டு !
திறந்தே கிடக்கும்
என் வீட்டில் மட்டும் வெளியே !

எனக்கு வீடு இருந்தும்
வீடாக இல்லாததே
என் கவலை !

என் வீட்டில் இருந்து
எடுத்து செல்ல
எதுவும் இல்லை என்று ...
தன்னிடம் இருப்பதை
வைத்துவிட்டு செல்வான்
திருட வந்த திருடனும்
என் நிலை புரிந்து !!!

எழுதியவர் : கார்த்திகேயன் (25-Dec-14, 12:28 am)
Tanglish : en nilai
பார்வை : 122

மேலே