சுனாமியின் சுவடுகள்

ஆழிப்பேரலைகள் ஆக்கிரமித்த
ஆக்ரோஷ வேதனை - சுனாமி .
பெயரிலேயே வேதனை .
குடியிருந்த வீடும் போச்சு .
கூண்டோடு ஊரும் போச்சு .
பழகிய முகங்கள் எல்லாம்
பலதிசைகளில் சடலமாச்சு .
நீரும் நிலமும்
நிகழ்த்திய வன்முறை
கல்லறையானதே - ஒரு
கடலோரத் தலைமுறை .
தாங்காது கடலம்மா !- நீ
தந்த துயர் போதுமம்மா !
இன்னொரு முறைவந்தா
ஏமாந்து போயிடுவ ...
மனிதரெல்லாம் மாண்டபின்
மறுபடி நீ என்ன செய்வ ?
தாகம் தீர்ந்ததா தண்ணீரே ..!
உன்னால் ......
தாரணி சிந்துதே கண்ணீரே ...!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Dec-14, 9:40 pm)
பார்வை : 68

மேலே