தன்னம்பிக்கை கட்டுரை

உலகம் எப்பொழுதுமே சாதனையாளர்களை மட்டுமே திரும்பிப் பார்க்கும்...................
வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் தோல்வியாளர்களைப் பற்றி அல்ல .........
நம்முடைய குறிக்கோளைப் பற்றிய வரையறை இருக்கலாம் ....ஆனால் இதற்கு மேல் முடியாது என்ற வட்டம் மட்டும் போட்டுக் கொள்ள கூடாது ..........

ஒரு ஊரில் ஒரு குறிப்பிட்ட கடையின் தவளை சூப் மிகவும் பிரபலமானது ..முதல் நாள் பதிவு செய்தால் மட்டும் தான் அடுத்த நாள் கிடைக்கும் அந்த அளவிற்கு தவளை சூப் கிராக்கி .......அந்த கடையின் முதலாளி எப்படியாவது நிறைய சூப் தினமும் தயாரித்து விற்க வேண்டும் என்ற ஆசை ...................ஆனால் அவ்வளவு தவளைகள் கிடைக்க வேண்டுமே....

அந்த சமயத்தில் தான் ஒருவன் வந்தான் முதலாளியைப் பார்க்க வந்தார் ,அவர் தினமும் 1000 தவளைகள் தருகிறேன் பெற்று கொள்கிறீர்களா என்று கேட்டார் .முதலாளிக்கு ஒரே மகிழ்ச்சி சரி என்று ஓப்புக் கொண்டார் .அடுத்த நாள் காலை அந்த மனிதர் தவளை தருகிறேன் என்று சொன்ன நேரத்தில் வரவில்லை.....

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது சிறிது நேரத்தில் அந்த மனிதர் அரக்க பரக்க வந்து சேர்ந்தார்.அவர் கொண்டு வந்த கூடையில் இரண்டே இரண்டு தவளைகள் மட்டுமே இருந்தன முதலாளிக்கு ஒன்றுமே புரியவில்லை 1000 தவளைகள் கொண்டு வந்து தருவர் என்றால் இப்படி இரண்டு தவளைகளோடு மட்டுமே வந்து இருக்கீங்களே என்று கேட்டே விட்டார். அந்த மனிதர் ஐயா நான் கூறியது உண்மைதான் ஆனால் என்னை மன்னித்து விடுங்கள் ......
இந்த இரண்டு தவளைக்கு மேல் என்னால் உங்களுக்கு தர முடியாது ......ஏனென்றால் என் வீட்டு அருகில் ஒரு குளம் உள்ளது தினமும் இரவு நேரம் அங்குள்ள தவளைகள் போடும் சத்தம் என்னால் தாங்க முடியவில்லை ....அவ்வளவு சத்தம் தூங்க கூட முடிவதில்லை .....ஆகையால் தான் உங்களுக்கு 1000 தவளைகள் தருகிறேன் என்று கூறினேன்.
ஆனால் எவ்வளவு நேரம் தேடினாலும் இந்த இரண்டு தவளைகளுக்கு மேல் சிக்க வில்லை .அப்புறம் தான் புரிந்த்தது இந்த இரண்டு தவளைகள் போட்ட சத்தம் தான் 1000 தவளைகளுக்கு மேல் சத்தம் போட்டதாக நான் எண்ணிக் கொண்டேன் போல....

இப்படித்தான் இவரைப் போலதான் நாமும் ஏதாவது ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிதாக எண்ணிக் கொள்ளுகிறோம்..
நாம் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டாலோ அல்லது தவறு நேர்ந்து விட்டாலோ அதைப் பற்றி தான் இந்த உலகம் பெரிதாகப் பேசி கொண்டிருக்கும் .இதற்கு மேல் நம்மால் என்ன செய்ய இயலும் என்று நினைக்கிறோம்.....யாராவது ஒன்று இரண்டு பேர் பேசுவதை கருத்தில் கொண்டு உலகமே அப்படித்தானே சொல்கிறது என்று இருந்து விடக்கூடாது ......
தவறுகளை திருத்திக்கொண்டு வரையறுத்த பாதையில் சரியாக செல்ல வேண்டும் ...............





போற்றுவோர் போற்றட்டும்....!
தூற்றுவோர் தூற்றட்டும்....!

எழுதியவர் : kannama (28-Dec-14, 1:49 pm)
பார்வை : 688

மேலே