அன்பின் அடையாளம் - அன்னை தெரேசா

இறைவன் படைத்த இன்முகத் தாயே
அன்பிற்க்கென்றும் இலக்கணம் நீயே.
இதுதான் வாழ்க்கை அர்த்தம் கொண்டு,
இயல்பாய் செய்த தொண்டுகள் நூறு …!

சுயநலம் கொண்ட சூத்திரர் மத்தியில் ,
பிறர்நல அக்கறைக் கொண்டவள் நீயே
தொட்டால் ஒதுங்கும் துயரின் மக்கள்
பற்றால் மனதைத் தொட்டவள் நீயே... !
 
போதும் என்ற செல்வம் இருந்தும்
அமைதி என்றும் தருமா என்று
உதறித் தள்ளி உலகைப் பார்த்தாய்
உறவுகள் இல்லா மனித குலத்தை …
 
குதறித் தள்ளும் நாய்கள் நடுவில்
குற்றுயிராய்க் துடிக்கும் மனித உயிரை
பார்க்கும் மக்கள் மத்தியில் நீயோ
பதறிப் போனாய் அன்னையைப் போல…

மழையாய் கண்ணீர் வந்தால் கூட
பிழைதான் செய்தான் ஆண்டவன் என்று
அலைபோல் கரையைத் தேடித் தேடி
தொடர்வோம்உந்தன் தொண்டுகள்போற்றி..

கருணை குணத்தால் பிறவி எடுத்தாய்
காக்கும் கரத்தால் அவரை மீட்டாய்
உறவே இல்லா மனிதர்கள் இன்று
அழைக்கும் அம்மா நீயே ஆனாய்... !
 
தூற்றுவோர் உன்னை ஏசியபோதும்
துயரம் கொண்டோர் மறுமைக் காண
தொண்டுகள் செய்து இன்பம் கண்டாய்…
உண்டு களிக்கும் அவர்முகம் கண்டு ,
 
அன்னை தந்தை மறந்த பிள்ளை
போற்றும் அன்னை என்றும் நீயே..
ஆசை சுகத்தில் பிள்ளை மறக்கும்
பெற்றோர்க் கெல்லாம் ஆறுதல் நீயே..
 
உலகம் போற்றும் உத்தமத் தாயே
உன் செயல் கண்ட ஆண்டவனும்
அழைத்தான் அம்மா அருகில் அமர
அன்பால் வென்றாய் அவனை நீயும்

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (30-Dec-14, 1:51 pm)
பார்வை : 154

மேலே