மகனுக்கு ஒரு மடல் வளைகுடா அன்பர்களுக்கு சமர்பணம்

மகனுக்கு ஒரு மடல் !

பாலை மணல் பணம் தேடி கண்ணே ---என்
இளமை எல்லாம் தொலைகிறது இங்கே !

சோலைமலர் உன் வளமை அங்கே ----
உன் சொல் அழகை கேட்டிடனும் எங்கே !

இருள் சூழ்ந்து பகல் மறைந்த போதும் ---கண்ணே
இளமை வளம்தான் என் கண் முன்னே தோன்றும்!

நீ கருவுற்று மாதங்கள் ஆறு ......கண்ணே
நான் கடல் தாண்டி போனேன் அரபு நாடு !

காசு மோகம் யாரை விட்டது பாரு.....இங்கு
என் வியர்வை கூட முதுமையாகிறது கேளு !

நீ பிறந்து விட்ட செய்தி மடல் கண்டேன் ....
என் பேராசை பார்த்து விட எண்னும்....

இங்கே நிலமைகளை யோசித்து தினமும்......
செத்து விடுவது என் ஆசைகள் திண்ணம் !

வளர் பிறையே ...வான் நிலவே .....அப்பாவின்
மடல் கண்டு அமைதி பெறுவாய் முன்னே !!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (15-Apr-11, 1:52 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 506

மேலே